OOSAI RADIO

Post

Share this post

முட்டை விலை அதிரடியாக குறைப்பு!

சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி இன்று (13) முதல் ஏப்ரல் 13 வரை செல்லுபடியாகும்.

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிப்பை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்

முட்டை உற்பத்தியாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (12.3.2024) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க, தற்போது சந்தையில் 50 ரூபாவை விடவும் குறைந்த விலையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதில்லை என தெரிவித்தார்.

இதேவேளை பொருளாதார மத்திய நிலையங்களில் குறித்த விலைக்கு குறைவாக முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அந்த விலையில் சாதாரண மக்களுக்கு முட்டைகள் கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter