OOSAI RADIO

Post

Share this post

இங்கு சுற்றுலா சென்றால் 2 லட்ச ரூபாய் அபராதம்!

கேனரி தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், கடற்கரை மணல், கல், பாறைத் துண்டுகளை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கேனரி தீவு நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அட்லான்டிக் கடலில் ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற கேனரி தீவு சர்வதேச சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற அழகிய தீவாகும்.

அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அழகிய கடற்கரைகளில் செந்நிற மணல் மற்றும் வெள்ளை நிற கற்களை பயணத்தின் நினைவாக கொண்டு வருவது வழக்கம். இதனால், தங்கள் நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ள கேனரி நிர்வாகம், அபராதத்தை அறிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter