இரவு நேரத்தில் காருக்குள் நடிகர் – நடிகை!

பூஜா ஹெக்டே கார் ஒன்றினுள் பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவுடன் இரவு நேரத்தில் ஒன்றாக இருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
பூஜா ஹெக்டே தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்துள்ளார். இவரின் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடத்தை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.
ஆனால் தமிழ் திரைப்படங்களில் இவருக்கு பெரிதாக வாய்ப்புக்கள் எதுவும் அவ்வளவு பெரிதாக கிடைக்கவில்லை.
இவர் நடித்த முகமூடி படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் பூஜா ஹெக்டேவும், பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவும் ஒரே காருக்குள் பின் பக்க சீட்டில் இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து கேஷுவலாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இது தற்போது வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள், இவர்தான் பூஜா ஹெக்டேவின் காதலரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.