OOSAI RADIO

Post

Share this post

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் அஜித் செய்த செயல்!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார்
தங்கராசு நடராஜன்

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு நடராஜன். சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட இவர், தனது அசாத்தியமான பந்துவீச்சால் கிரிக்கெட்டில் சாதித்து காட்டியவர் ஆவார்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார். மேலும், தற்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

நடராஜன் இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக நேற்று நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் நடராஜனுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது. நடராஜனின் பிறந்தநாள் விழாவில் நடிகர் அஜித் கலந்து கொண்டது அவரின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment

Type and hit enter