கவுண்டமணியை பழிக்குப்பழி வாங்கிய வடிவேலு!
தமிழ் சினிமாவில் காமெடி லெஜண்ட் நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. பல புகழுக்கு பெயர் போனாலும் சில சர்ச்சைகளில் சிக்கி வந்தவர் கவுண்டமணி. அப்படி, வளர்ந்து வந்த வைகைப்புயலை நடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியதும் கவுண்டமணி தான். ஆனால் அதையெல்லாம் மறந்து தன் திறமை மூலம் நல்ல ஒரு இடத்தினை பிடித்தார் வடிவேலு.
சமீபத்தில், கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்து சில படங்களை இயக்கிய இயக்குனர் வி. சேகர் பேட்டியொன்றில் வடிவேலு பற்றிய சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், 4, 5 சீன் இப்போது தான் நடித்திருக்கிறான், என் மார்க்கெட்டை குளோஸ் பண்ணிவிடுவீங்களே என்று கோவை சரளா, வடிவேலுவை பற்றி கூறினார். இது தெரிந்த கவுண்டமணி கோவை சரளாவை நடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், வடிவேலு மீது நம்பிக்கை வைத்து, கோவை சரளாவுக்கு ஜோடியாக படங்களில் அடுத்து நடிக்க வைத்தேன். அப்படி வரவு எட்டன்னா செலவுபத்தனா என்ற படத்தில் நடிக்க வைத்தேன். வடிவேலுவை, கவுண்டமணி பல இடங்களில் அசிங்கப்படுத்தியதை நினைத்து, மனதில் வைத்திருந்தார். பின் வளர்ந்து வந்த வடிவேலு, நான் பெத்த மகன் சமயத்தில் ஒரு கார் வாங்கினான்.
வரவு எட்டன்னா செலவுபத்தனா நன்றாக போனதால் 1 லட்சம் கொடுத்தேன். ஷூட்டிங்கில் கவுண்டமணி, செந்தில் கார்கள் இருக்கும் போது, அவன் காரில் உட்கார்ந்து இருவரின் கார்களுக்கு இடையில் நிறுத்தினான். அதில் என்னையும் உட்கார வைத்து அதை செய்தான். தன்னை அசிங்கப்படுத்தியவர்களை பழித்தீர்க்கும் வண்ணம் இப்படி செய்திருக்கிறான் என்று இயக்குனர் வி. சேகர் தெரிவித்துள்ளார்.