IPL இல் வனிந்துவிற்கு பதில் வியஸ்காந்த்!
இலங்கை மண்ணின் இளம் கிரிக்கட் வீரரான விஜயகாந்த் வியஸ்காந்த் IPL போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
உபாதை காரணமாக வனிந்து ஹசரங்க IPL தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விஜயகாந்த் வியஸ்காந்த் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு இடம்பெற்ற IPL தொடரில் ஹைதராபாத் அணிக்கென வலைப்பந்து பயிற்சிக்கான பந்துவீச்சாளராக வியஸ்காந்த் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.