டொலர் மற்றும் எரிவாயு விலையில் வீழ்ச்சி!
ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எரிவாயு, மின்சாரம், டொலர் என்பன கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் குறைந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளின் விலையும் ஓரளவு குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்காலத்தில் தம்புள்ளை, மீகொட, வெலிசறை, வெயங்கொடை ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.
1 கிலோ 200 ரூபாவுக்கு கூட விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.