இறுதிவரை போராட்டம் – பயனளிக்காத முடிவு!
நடைபெற்றுவரும் 17 ஆவது ஐபிஎல் தொடரின் 23 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று மோதிக்கொண்டன.
பஞ்சாப் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் போட்டி நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
அதற்கமைய, சன்ரைசர்ஸ் அணி நீறணியகப்பட்ட 20 ஓவர்களில் 183 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது.
பதிலுக்கு, துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பெடுத்தாளர்கள் சரியாக பிரகாசிகாமல் ஆட்டமிழந்தனர்.
அதனையடுத்து களமிறங்கிய ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா உறுதியான இணைப்பாட்டத்தை வழங்க பஞ்சாப் அணி வெற்றியின் விளிம்பு வரை சென்றது.
ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் இறுதிவரை போராடி வெற்றியின் விளிம்பிற்கு பஞ்சாப் அணியை அழைத்து சென்ற போதிலும் சன்ரைசர்ஸ் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது.
எனினும், கடைசி 2 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் அணியால் 7 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன் அடிப்படையில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் முறையே 46 (25 பந்துகள்) மற்றும் 33 (15 பந்துகள்) ஓட்டங்களை பெற்றனர்.
அதேவேளை, பஞ்சாப் அணி சார்பில் அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மேலும், புள்ளிபட்டியலில் ஹைதரபாத் அணி 5 ஆவது இடத்திலும் பஞ்சாப் அணி 6 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.