கண் சிமிட்டுறீங்களா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கண்களை சிமிட்டும் முறைகளின் ஒருவரது ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பெரியவர்கள் சராசரியாக நிமிடத்திற்கு 14 அல்லது 17 முறை கண்களை சிமிட்டுவார்கள். எனினும் ஒருவர் கண்களை இந்த அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிமிட்டினால், உடலில் ஏதோ சரியில்லை என்று அர்த்தம் மற்றும் இது உடலில் உள்ள தீவிர ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க பர்கின்சன் நோய் சங்கத்தின் கூற்றுப்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பர்கின்சர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கண் சிமிட்டலை கவனித்ததில், அவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முறை குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் நாம் கண் சிமிட்டும் வேகமானது மூளையில் டோபமைனின் செயல்பாட்டை எதிரொலிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதில் டோபனைன் அளவு குறைவாக இருக்கும் போது, கண்களை சிமிட்டும் வேகம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
முக்கியமாக பார்கின்சன் நோயின் ஒரு தனித்துவமான அம்சம் டோபமைன்-உற்பத்தி செய்யும் நரம்பு செல்களை இழப்பதாகும். இந்த நோய் இருந்தால் மெதுவாக கண்களை சிமிட்டுவது மற்றும் கை நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
மேலும் யாரோ ஒருவர் உங்களை கண்காணிப்பது போன்று உணர்கிறீர்களா? இந்த விசித்திரமான அறிகுறியும் பர்கின்சன் நோயின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பர்கின்சன் நோயானது 60 வயதிற்கு மேல் தான் வரும். ஆனால் சிலருக்கு 50 வயதிற்கு முன்பே ஏற்படலாம். எனவே நீங்கள் வழக்கத்தை விட மிகவும் மெதுவாக கண்களை சிமிட்டினால் மற்றும் உங்களின் இயக்கங்களில் மந்தநிலை மற்றும் எந்த ஒரு செயலிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போனால் பர்கின்சன் நோய் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த பர்கின்சன் நோயால் அமெரிக்காவில் மட்டும் சுமார் அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்களை குறைவாக சிமிட்டுவது கிரேவ்ஸ் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியினால் ஏற்படுகிறது.
இந்த கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நபர் கைகள் அல்லது விரல்களில் லேசான நடுக்கம், எடை இழப்பு, வீங்கிய தைராய்டு சுரப்பி, கண்கள் மற்றும் தாடைகளில் வீக்கம், தாடைகள் அல்லது கால்களின் நிறம் சிவந்து காணப்படும்.
இந்த கிரேவ்ஸ் நோயானது எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பெரும்பாலும் 20 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே பொதுவானது.
இந்த கிரேவ்ஸ் நிலையானது ஒவ்வொரு 100 அமெரிக்கர்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பாதி வழக்குகளில், இந்நோய் கண்களை பாதிக்கிறது. அதுவும் கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் இமைகள் பெரும்பாலும் விரிவடைந்து காணப்படும். மேலும் கண் இமைகள் இறுக்கமாக மாறுவதால், கண்களை குறைவாக சிமிட்ட வழிவகுக்குகிறது.
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களை விட சற்று குறைவாக கண்களை சிமிட்டுவது தெரிய வந்தது. அதுவும் ஒரு நிமிடத்திற்கு 13 முறை மட்டுமே கண்களை சிமிட்டியுள்ளனர்.
ஆனால் ஆரோக்கியமான பங்கேற்பாளர்களின் சராசரி ஒரு நிமிடத்திற்கு 20 கண் சிமிட்டல்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
மிகுந்த உடல் சோர்வு மற்றும் கண் வறட்சி
மறுபுறம், அடிக்கடி கண் சிமிட்டுவது சோர்வுக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தவிர கண் வறட்சியை ஈடுசெய்ய முயற்சிக்கும் போது அடிக்கடி கண்களை சிமிட்ட நேரிடும். ஒருவருக்கு கண் வறட்சியானது பல காரணங்களால் ஏற்படலாம்.
அதில் ஒன்று தான் Sjogren’s syndrome – ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதில் நோயெதிர்ப்பு மண்டலமானது சுரப்பிகளை தாக்கி கண்ணீரையும், உமிழ்நீரையும் உருவாக்கும்.
Sjogren’s syndrome நோயால் கண்கள் வறட்சியடையும் போது, அது அரிப்பு அல்லது எரிச்சலுக்கு வழிவகுத்து, அதிகமாக கண்களை சிமிட்டத் தூண்டும். சில சமயங்களில் அழற்சி கூட அதிகமாக கண்களை சிமிட்டத் தூண்டலாம்.
அதுமட்டுமின்றி, அடிக்கடி கண்களை சிமிட்டுவது டூரெட் நோய்க்குறியுடன் தொடர்புடைய ஒரு மோட்டார் நடுக்கமாகவும் (Motor tics) இருக்கலாம்.
டூரெட் நடுக்கங்கள் ஒரு நாளைக்கு பல முறை, ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கூட நிகழலாம். பொதுவாக நடுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் உருவாகின்றன, ஆனால் காலப்போக்கில் குறைய முனைகின்றன. பலர் இளமைப் பருவத்தில் அவற்றிலிருந்து வெளியேறுகிறார்கள்.