OOSAI RADIO

Post

Share this post

கோட்டா, மஹிந்த, பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

தொழிலதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரிடம் இருந்து 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்காக மேற்கூறப்பட்ட இவர்கள் அனைவரும் வட்டியுடன் கூடிய 50 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு பணத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு செலுத்தாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டும் பாவிக்க கூடிய சத்திரசிகிச்சை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர் கலிங்க சில்வா, சட்டத்தரணி பிரமோத் பொல்பிட்டிய ஊடாக இந்த கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.

2019 மற்றும் 2022 க்கு இடையில் பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டதன் காரணமாக, தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், இதன் விளைவாக 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தினசரி மின்வெட்டு என்பன வர்த்தக நடவடிக்கைகளில் நட்டம் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் மற்றும் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார் கப்ரால் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் SC FR 195/2022 இன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியை தவறாகக் கையாண்டதுடன் அவர்கள் மீது வைக்கப்பட்டிருந்த பொது நம்பிக்கையையும் மீறியுள்ளதாக தொழிலதிபர் கூறியுள்ளார்.

Leave a comment

Type and hit enter