OOSAI RADIO

Post

Share this post

அதிர்ச்சி செய்தி – 200 பிள்ளைகளுக்கு தந்தை!

இரண்டு பேர் இருநூறு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர் என்றால் நம்ப முடிகின்றதா? கனடாவில் இவ்வாறான ஓர் சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் சுமார் 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர்.

இந்த இருவரும் விந்தணு தானம் செய்ததன் மூலம் இவ்வாறு 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து விந்தணு தானம் செய்துள்ளனர்.

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாகாணத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பெண்களுக்கு விந்தணு தானம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நூற்றுக் கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்த விந்தணு தானம் செய்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவரும் தானம் செய்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் இவர்கள் மூவரும் இணைந்து செய்த தானத்தின் ஊடாக எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விந்தணு தானம் செய்தவர்களுக்கு ஏதேனும் பரம்பரை குறைபாடுகள் அல்லது நோய்கள் இருந்தால் அவை இந்த பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கும் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter