OOSAI RADIO

Post

Share this post

வெளிநாடு சென்றுள்ள வேட்பாளர்கள் – புதிய சிக்கல்!

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கிட்டத்தட்ட இருபது வேட்பாளர்கள் இறந்துவிட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 500 வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவிடம் வினவிய போது, ​​உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை கண்டறியும் விசேட நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், வேட்பாளர்கள் தொடர்பில் அவ்வாறான விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதற்கு மாவட்டச் செயலகங்கள் மற்றும் அந்தந்த அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறலாம் என தேர்தல் ஆணையகம் ரெிவித்துள்ளது.

இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்ட நிலையில் அதில் 80,672 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

Leave a comment

Type and hit enter