OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் தங்க விலையில் தொடர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச்செல்கின்றது.

இன்றைய (28) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 758,148 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 கரட் தங்க கிராம் 26,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,530 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter