சம்பள அதிகரிப்பு உறுதி!
அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்காப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அரசாங்கம் ஒன்றே எமக்குக் கிடைக்கப்பெற்றது.
நாம் கட்டுப்பட வேண்டிய பல விடயங்களை சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு எமது தேசிய வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15வீதமாக அமைய வேண்டும் என்பது அதில் ஒன்றாகும்.
இவ்வாறு பல சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன. ஒன்று நாங்கள் அந்த நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து வெளியில் வர வேண்டும். அல்லது அந்த ஒப்பந்தத்திற்குள் இருந்து கொண்டே சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எமது நாட்டின் தற்போதைய பொருளாதார இயலுமையை பொறுத்தமட்டில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியில் வர முடியாது.
நிச்சயமாக உழைக்கும் போது செலுத்தவேண்டிய வரி தொடர்பான சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அந்த நிவாரணம் மக்களுக்கு கிடைக்கும்.
அத்துடன், அரச ஊழியர்களின் சம்பளமும் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.