OOSAI RADIO

Post

Share this post

விஷால், அன்ஷிதா, தர்ஷிகா – வௌியான பல உண்மைகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அன்ஷிதா விஷாலின் காதில் ஏதோ கூறினார். இது தொடர்பில் பேட்டியொன்றில் பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் எந்த ஒரு சீசனிலும் காதல் ஜோடியாக இணையாமல் இருந்தது இல்லை என்று கூறலாம். அப்படி ஒரு அமைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது.

இந்த சீசனில் அன்ஷிதா, விஷால், தர்ஷிகா ஆகியோருக்கு இடையில் ஒரு காதல் கலாட்டா உள்ளது. இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போது அதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தர்ஷிகா- விஷால் காதலிப்பதாக அன்ஷிதா இடையில் சென்று சில வேலைகள் பார்ப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் பொழுது தர்ஷிகா யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் 2 வாரங்களுக்கு பின்னர் அன்ஷிதா குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது விஷால் காதில் ஏதோ கூறி விட்டு வெளியே வந்தார்.
விஷால் என்னுடைய காதலர் அல்ல..

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அன்ஷிதா சில நாட்களுக்கு பின்னர் என்ன சொன்னார் என்பதனை ஓபனாக பேசியுள்ளார்.

அதாவது, தொகுப்பாளர் அன்ஷிதாவிடம், “விஷாலை நீங்கள் காதலிக்கிறீர்களா?” என்றும் “அவர் காதில் என்ன கூறினீர்கள்?” என்றும் கேட்டார். அதற்கு அன்ஷிதா,“ நான் யாரையாவது காதலிக்கிறேன் என்றால், காதில் ரகசியமாக சொல்ல மாட்டேன், சத்தமாகவே சொல்லி இருப்பேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான..” என கூறினார்.

அப்போது விஷால் காதில் என்ன சொன்னீர்கள் என கேட்டதற்கு “நான் என்னுடைய முன்னாள் காதலனின் பெயரை கூறினேன்” எனக் கூறினார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் அன்ஷிதாவின் இந்த உண்மைத்தன்மை ரசிகர்கள் பலரை ஈர்த்துள்ளது.

Leave a comment

Type and hit enter