பிரபல பின்னணி தமிழ் பாடகர் காலமானார்!
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.