OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் குறைவடையும் வாகனங்களின் விலை!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விலை, ஆரம்பத்தில் அதிகமாக இருந்தாலும், காலப்போக்கில், வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார் .

வெளிநாட்டு இருப்புகளில் தாக்கம் ஏற்படுவதை கவனத்தில் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்த முடிவு கவனமாக எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை டொலர் வீதத்தின் அதிகரிப்பு காரணமாக வாகன விலை அதிகமாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வாகனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்தால் மற்றொரு நெருக்கடியை நாடு எதிர்கொள்ள முடியாது என்பதன் காரணமாகவே, சில வரிகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter