வைரலாகும் கீர்த்தியின் அரபிக்குத்து நடனம்! (வீடியோ)
சூப்பர் 30 எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் விஜய் சேதுபதியுடன் தெலுங்குப் படத்தில் 2021இல் உப்பெனா படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. பின்னர் ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
இறுதியாக அவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது ஜெயம் ரவியுடன் ஜுனி, வா வாத்தியாரே, ஷர்வா 35 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பெல்லி டான்ஸ் எனப்படும் இடை நடனத்தில் பயிற்சி எடுத்து வருகிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக்குத்து பாடலுக்கு கீர்த்தி ஷெட்டி நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்தியின் 26 வது படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது