OOSAI RADIO

Post

Share this post

மரணத்தால் மாறிப்போன நடிகர் அஜித்!

அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தையும் கமிட் செய்து வைத்துள்ளார்.

நடிகர் அஜித் அமராவதி திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அதற்கு முன்பே மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகவிருந்த திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவிருந்தாராம் அஜித். இந்த நிலையில், அஜித்தை பற்றி பிரபல தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் என்பவர் பேசியுள்ளார்.

இதில் “அமராவதிக்கு முன்பே மணிரத்னம் தயாரிப்பில்தான் அஜித் நடிக்கவிருந்தார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த ரமணாதான் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. அதனால் அந்தப் படத்துக்கான ஸ்டில்ஸ் எடுக்க அஜித்தை வரவழைத்து கேமரா மேன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்”.

“அந்த சமயத்தில் போட்டோ எடுக்கும்போதே அந்த கேமரா மேனுக்கு வலிப்பு வந்து இறந்துவிட்டார்”. அதனால் அந்தப் புகைப்படம் எல்லாம் அமராவதி படத்துக்காக பயன்படுத்தப்பட்டன. இல்லையென்றால் அமராவதிக்கு முன்பே அஜித்தை மணிரத்னம்தான் அறிமுகப்படுத்தியிருப்பார்” என கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a comment

Type and hit enter