இலங்கையின் தனிநபர் வருமானம் 73,000 ரூபாவால் குறைவு - oosai.lk

OOSAI RADIO

Post

Share this post

இலங்கையின் தனிநபர் வருமானம் 73,000 ரூபாவால் குறைவு

இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த சில வருடங்களில் 73,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதவீதத்தின் அடிப்படையில், இது உண்மையான தனிநபர் வருமானத்தில் 12% வீழ்ச்சியாகும்.

2019 ஆம் ஆண்டில், உறுதியான தனிநபர் வருமானம் 6 இலட்சத்து 5709 ரூபாவாக இருந்தது, 2021ஆம் ஆண்டில் அது 592,413 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்குள் 532,646 ஆக குறைந்துள்ள போக்கை காட்டுவதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலத்தில் நாட்டில் உள்ளூர் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13,206 பில்லியன் ரூபாவாகவும், 2021 ஆம் ஆண்டில் 13,125 பில்லியன் ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டின் இறுதியில் இது ரூ.11,881 பில்லியனாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, நாட்டில் ஒருவரின் மாதாந்த உறுதியான வருமானமும் கிட்டத்தட்ட 6150 ரூபா குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter