இஸ்ரேலுக்கு ஈரான் வழங்கிய தண்டனை!
ஈரானால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் அவர்கள் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுக்கு எதிராக செய்த குற்றங்களுக்கான குறைந்த பட்ச தண்டனை என ஈரானின் உயர் தலைவர் அலி கொமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் – தெஹ்ரானில் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“பிரிவினை மற்றும் தேசத்துரோகத்தை விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதே நமது எதிரியின் கொள்கைகள் ஆகும்.
அவர்கள் பாலஸ்தீனியர்கள், லெபனானியர்கள், எகிப்தியர்கள், ஈராக்கியர்களுக்கும் எதிரிகள்.
சையத் ஹசன் நஸ்ரல்லா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது ஆன்மாவும், அவரது பாதை என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும்.
அவர் சியோனிச எதிரிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். அவரது தியாகம் இந்த செல்வாக்கை மேலும் அதிகரிக்கும்.
நஸ்ரல்லாவின் இழப்பு வீண் போகவில்லை. நமது அசைக்க முடியாத நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு எதிரிக்கு எதிராக நிற்க வேண்டும்” என்றார்.