OOSAI RADIO

Post

Share this post

பண மழையில் நனையப்போகும் ராசிகள்!

செவ்வாய் பகவான் தற்போது வக்ர நிலையில் இருக்கும் நிலையில், நேர் திசைக்கு வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி மாற்றம் அடைகிறார். செவ்வாய் பகவான் மாற்றமடைவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மகா சிவராத்திரிக்கு இரண்டு நாள்களுக்கு முன் தன் நிலையை மாற்றுகிறார். அதாவது, பெப்ரவரி 24 ஆம் திகதி செவ்வாய் வக்ர நிலையில் இருந்து நேர் திசைக்கு மாறுகிறார். இதனால், இந்த நிலை மாற்றத்தாலும் சிலரின் வாழ்க்கை மொத்தமாக மாறும். பண பலனும் அதிகரிக்கும்.

அந்த வகையில், செவ்வாய் கிரகத்தின் நிலை மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 3 ராசிகள் எவை என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மிதுனம்

செவ்வாய் பகவான் நிலையை மாற்றிக்கொள்வதால் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகமாகும். துணிச்சலும், வீரமும் அதிகரிக்கும். நீண்ட நாள்களாக தள்ளிப்போட்டு வந்த விஷயங்களை இந்த நேரத்தில் சிறப்பான முறையில் தொடங்குவீர்கள். பல்வேறு வீதங்களில் உங்களுக்கு வருமானம் வரும். சமூகத்தில் மதிப்பும் அதிகரிக்கும்.

சிம்மம்

செவ்வாய் பகவான் பெப்ரவரி 24 ஆம் திகதி நிலையை மாற்றுவதால் சிம்ம ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் வருமானம் ஒவ்வொரு நாளும் உயரும். புதிய நிலம் வாங்குவதற்கான முன்பணத்தை நீங்கள் செலுத்த வாய்ப்புள்ளது, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் உங்களிக்கு கிடைக்கும், அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

துலாம்

பெப்ரவரி 24ஆம் திகதி செவ்வாய் பகவான் தனது நிலையை மாற்ற உள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு பழைய நோய்கள் அல்லது பழைய உடல்நலப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணி தொடர்பாக நீண்ட தூரம் பயணிப்பீர்கள். வீட்டில் சுப காரியம் நடைபெறும்.

Leave a comment

Type and hit enter