OOSAI RADIO

Post

Share this post

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த தவறு!

பாடகி பவதாரணி செய்த இந்த சிறிய தவறை மற்ற யாரும் செய்துவிட வேண்டாம் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.

பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சில தினத்திற்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வந்து அதற்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இவருக்கு கேன்சர் நான்காம் கட்டம் என்பதால் இனி மருத்துவம் பார்த்தும் பயனில்லை… அப்படியே விட்டுவிடுவதற்கு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் உயிரிழந்த பவதாரணியின் உடலை இந்தியா கொண்டுவரப்பட்டு, பின்பு அவர்களது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில், இளையராஜாவின் அம்மா மற்றும் மனைவி இவர்களை அடக்கம் செய்த இடத்திற்கு அருகேயே பவதாரணியை புதைத்துள்ளனர்.

இளையராஜாவின் செல்ல மகளாகவும், பண வசதியில் குறைவில்லாமல் இருந்தாலும் பவதாரிணிக்கு நான்காவது ஸ்டேஜ் வரைக்கும் புற்றுநோய் இருப்பதே தெரியாமல் இருந்திருக்கிறது. இதற்கு காரணம் அவர் செய்த சின்ன சின்ன தவறுகள் தான் என்று கூறப்படுகின்றது.

பவதாரணி பெரிய அளவில் பாடுவதற்கு அவரது தந்தை இளையராஜா ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். அதன் பின்பு அவரது திறமையை அவதானித்து பாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

வீட்டின் செல்லப்பிள்ளையாகவும், அப்பா மற்றும் அண்ணன்களுக்கு இடையே அன்பு பாலமாகவும் இருந்த பவதாரணி தான், அண்ணன் சார்பாக அப்பாவிடம் சென்று எந்த காரியம் என்றாலும் பேசி சம்மதம் வாங்குவாராம்.

இவ்வாறு செல்லமாக இருந்த இவருக்கு சில ஆண்டுக்கு முன்பு கணையத்தில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர்.

பின்பு சில நேரங்களில் அவ்வப்போது வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பவதாரணி அந்த நேரத்திற்கு சுகமளிக்கும் அளவிற்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துள்ளார்.

இதுதான் பவதாரணி செய்த தவறு என்று தற்போது கூறப்படுகின்றது. இவ்வாறு பவதாரணி செய்தது அந்நேரத்தில் அவருக்கு சுகமளித்தாலும், புற்றுநோயை உள்ளிருந்தே வேகமாக வளர வைத்துள்ளது.

நமக்கு எதுவும் நடக்காது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் பவதாரிணியும் நம்பி இருக்கிறார். அதனால் தான் தனக்கு வந்த சின்ன சின்ன வலி வேதனைகளை கூட அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து மாத்திரைகளை எடுத்து அதை குறைந்தது அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.

கடைசியில் ரொம்பவும் முடியாமல் ஆன போது தான் பவதாரிணிக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கு புற்றுநோயில் நான்காவது கட்டத்தில் பவதாரணி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஆதலால் உடம்பில் சிறிய வலி ஏற்பட்டால், அந்த வலி நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருந்தால், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு பிரச்சினை என்ன என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

தற்காலிக சுகத்திற்கு அவ்வப்போது மருந்து மாத்திரைகளை எடுக்கும் வழக்கத்தினை வைத்திருப்பவர்கள் இனி இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள்.

Leave a comment

Type and hit enter