OOSAI RADIO

Post

Share this post

எமி ஜாக்சனுக்கு திருமணம்!

தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட சில படங்களில் நடித்தார்.

பின், மார்க்கெட் இழந்ததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய்யின் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தொடர்ந்து, எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இருவரும் இந்தியாவுக்கு இணைந்தே வந்தனர். இங்கு எமி ஜாக்சனின் படப்பிடிப்புகளிலும் அவர் குழந்தை ஆண்ட்ரியாஸூடன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், எட் வெஸ்ட்விக் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்த எமி ஜாக்சன், அதற்கு ஒப்புக்கொண்டதையும் அறிவித்திருக்கிறார். இதன் மூலம், விரைவில் எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Type and hit enter