ஹனுமான் படத்தின் வசூல் இத்தனை கோடிகளா?
ஹனுமான் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான்.
தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் திரைப்படம் உலகளவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீமதி சைதன்யா இப்படத்தை வழங்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12 ஆம் தேதி வெளியானது.
ஹனுமான் திரைப்படம் 5 நாள்களில் ரூ. 120 கோடியை தாண்டி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இத்திரைப்படம் ஜீ 5 ஓடிடியில் வரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஹனுமான் திரைப்படம் 25 நாள்களில் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.