அஸ்வினுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையிலேயே அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக பஞ்சாப் – தர்மசாலாவில் நடைபெற்றுள்ள போட்டியில் சிறப்பாக செயற்பட்ட அஸ்வின் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்தே, அவர் 870 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேவேளை, இரண்டாம் இடத்தை ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஜோஷ் ஹசல்வூட் ஆகியோர் 847 புள்ளிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். மேலும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய 783 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.