தங்கம் போல் முகத்தை ஜொலிக்க களிமண்!
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக பலரும் பல முறைகளில் முயற்சித்து பார்ப்பதுண்டு. ஆனால் அவை அனைத்தும் நிரந்தரமான தீர்வை வழங்குவதில்லை. அந்தவகையில் அனைவருக்கும் இலகுவாக கிடைக்கக்கூடிய பொருளை வைத்து முகத்தை எப்படி ஜொலிக்க வைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முல்தானி மிட்டி என்பது தாதுக்கள் நிறைந்த களிமண் போன்ற பொருளாகும். இது பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற நகரத்தில் இருந்து உருவாகின்றது.
இது நீரேற்றப்பட்ட அலுமினிய சிலிகேட்டுகளால் ஆனது. இந்த மண் கலவையானது பழுப்பு, பச்சை மற்றும் வெள்ளை போன்ற இயற்கை வண்ணங்களில் இருக்கும்.
இதை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பார்க்கலாம். குறிப்பாக எண்ணெய் குறைக்கும், முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது, தோல் தொனியை சமநிலைப்படுத்தும்.
உங்களுடைய சருமமானது எண்ணெய் தன்மையில் இருக்கிறது என்றால் இந்த பொருள் உங்களுக்கு உகந்ததாகும்.
அழுக்கை நீக்கி அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்தலாம்?
முகத்தில் அதிகளவில் பருக்கள் இருந்தால் ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து சருமத்தில் தடவலாம்.
சருமம் வறண்ட தோற்றத்தில் இருந்தால் காய்த்து எடுக்காத பாலுடன் முல்தானி மெட்டி சேர்த்து பூசவும்.
முல்தானி மெட்டி மற்றும் முட்டை பயன்படுத்தி முடியை Straightening செய்யலாம்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, அதை முகத்தில் பூசவும்.
சருமம் மென்மையாக இருப்பதற்கு, 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி கலந்து அதை முகத்தில் தடவி கழுவவும்.
சருமத்தில் உள்ள கருமையை போக்க 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் புதினா பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி கழுவவும்.
தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு பப்பாசி பழத்தை மசித்து எடுத்து, அதில் முல்தானி மெட்டி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி கழுவவும்.