OOSAI RADIO

Post

Share this post

ஜுன் மாதத்தில் நிறுத்தப்படும் கூகுள் பே!

கூகுள் நிறுவனம், கூகுள் பே, கூகுள் ஒன், விபிஎன் போன்ற சேவைகளை நிறுத்துவதாக அறிவிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.

கூகுள் வரும் ஜுன் மாதத்தில் மிகப்பெரிய நடவடிக்கையை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளது. ஆம் ஜூன் மாதத்தில் Google Pay மற்றும் Google VPN சேவைகள் படிப்படியாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இதனால் பல மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்படும் நிலையில், இந்திய பயனர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகின்றது.

வரும் ஜுன் மாதம் 20ம் தேதி கூகுளுக்குச் சொந்தமான Google One VPN சேவை நிறுத்தப்படுகின்றது. இந்த சேவை இந்தியாவில் இதுவரை தொடங்கவில்லை.. ஆதலால் இந்தி பயனர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

Google Pixel 7 தொடர் பயனர்களுக்கு இலவச Pixel VPN சேவை தொடர்ந்து வழங்கப்படும். இதில் கூகுள் பிக்சல் 7, கூகுள் பிக்சல் 7 ப்ரோ, கூகுள் பிக்சல் 7 ஏ மற்றும் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

கூகுள் பே செயலி அமெரிக்காவில் வரும் ஜூன் 4 முதல் மூடப்படும். இருப்பினும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற சந்தைகளில், Google Pay முன்பு போலவே செயல்படும்.

அமெரிக்க சந்தையில் கூகுள் பே சேவைக்கு பதிலாக, இந்தியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கூகுள் வாலட் அமெரிக்காவிற்கு வழங்கப்பட இருக்கின்றது.

ஆனால் இந்தியாவில் கூகுள் பே மற்றும் கூகுள் இரண்டும் தனித்தனி சேவைகளாக செயல்படும். அதாவது இந்திய கூகுள் பே ஆப்ஸ் பயனர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும்.

கூகுளின் இரண்டு சேவைகள் நிறுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது இந்த விளக்கம் அனைவரையும் பெருமூச்சு விட வைத்துள்ளது.

Leave a comment

Type and hit enter