OOSAI RADIO

Post

Share this post

பாடசாலை மாணவி மர்மான முறையில் மரணம்!

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

கொலனாவை பகுதியை சேர்ந்த 14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி வீதியில் சென்ற நாய்க்குட்டி ஒன்றை தன்னுடன் கொண்டு வளர்ந்து வந்துள்ளார். எனினும் குறித்த நாய்க்குட்டி திடீரென உயிரிழந்துள்ளது.

நாய்க்குட்டி உயிரிழந்து சில வாரங்களில் குறித்த மாணவியும் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியர்கள், விசர் நாய்கடி நோய் காரணமாக மாணவி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

சமகாலத்தில் பல வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்மை பொதுவான விடயமாக உள்ளது.

இந்நிலையில் தங்கள் செல்லப்பிராணி இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அதை உன்னிப்பாகக் அவதானிக்குமாறும் வைத்தியர்கள் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a comment

Type and hit enter