இந்த மாத்திரையை சாப்பிடுபவர்களா நீங்கள்?
மல்டி வைட்டமின்கள் சாப்பிடுவது தொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஜாமா நெட் ஒர்க் ஓபன் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆய்வில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 4,00,000 ஆரோக்கியமான பெரியவர்கள் உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவில், நீண்ட காலம் வாழ்வதற்குப் பதிலாக, மல்டி வைட்டமின்களை எடுத்துக் கொண்டவர்கள் 4 சதவீதம் அதிகமாக உயிரிழக்கிறார்கள்.
நாளாந்தம் மல்டி வைட்டமின்கள் உயிரிழப்பு அபாயத்தை குறைக்கின்றன என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி, இ மற்றும் துத்தநாகம் ஆகியவை வயது தொடர்பான சிதைவைக் குறைக்கின்றன.
மல்டிவைட்டமின்களின் விலை அதிகமில்லை என்பதால், அவற்றை நேரடியாக எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.
நமது உணவில் அதிக காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் அல்லது பருப்பு வகைகளைச் சேர்ப்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்ளலைக் குறைப்பது, பணியின் பெயரில் சதா உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது,
மது அருந்துவதைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் வைட்டமின் தேவையை பூர்த்தி செய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.