ஹர்திக் பாண்டியா விலகினார்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபதுக்கு இருபது மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் ஹர்திக் பாண்டியா டி20 அணி தலைவராக செயல்படவுள்ளார்.
எனினும், ஹர்திக் பாண்டியா அதன்பின்னர் நடக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.