தன்னுடன் உறவுகொள்ள பணம் வாங்கிய மனைவி – கணவன் எடுத்த அதிரடி முடிவு!
திருமணமான 3 வருடங்களுக்குள் அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை வர தொடங்கியது.
தைவானில் உடலுறவு கொள்ள மனைவி தன்னிடம் பணம் கேட்பதாக கூறி, கணவர் ஒருவர் விவாகரத்து பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவானில் ஒரு இணையர் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருந்தது. ஆனால் திருமணமான 3 வருடங்களுக்குள் அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை வர தொடங்கியது.
எனவே அவர்கள் உறவுகொள்ளும் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. கணவரை பிரிய மறுத்த மனைவி, உடலுறவு கொள்ளும் எண்ணிக்கையை மட்டும் குறைத்து, அவருக்கு மன உளைச்சலை கொடுத்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, 2019ஆம் ஆண்டிற்கு பிறகு, அவர் உடலுறவு கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துள்ளார்.
இதற்கு காரணமாக, தனது கணவர் மிகவும் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், திறமையற்று இருப்பதாகவும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மிகவும் மனவேதனையடைந்த கணவர், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இனி அப்படி நடந்துகொள்ளமாட்டேன் என மனைவி கூறியதன்பேரில், அந்த வழக்கை திரும்ப பெற்றுள்ளார். இதையடுத்து மனைவியின் பெயரில் சொத்துகளைக்கூட மாற்றியுள்ளார் அந்த கணவர்.
ஆனால் 2021ஆம் ஆண்டிற்கு பிறகு, கணவருடன் உடலுறவு கொள்ளவும், தன்னிடம் பேசவும் ஒவ்வொருமுறையும் அந்த மனைவி $15 (ரூ.1200) வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த மனைவி அவருடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். மெசேஜிங் ஆஃப்கள் மூலமாக தேவையான போது மட்டும் பேசியுள்ளார். மேலும் மனம் நொந்த அவர், மீண்டும் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.
இதை கேட்ட நீதிபதி, இந்த உறவை சரிசெய்வது மிகவும் சிரமம் என தெரிவித்தார். மேலும் மனைவி விவாகரத்து வேண்டாம் என தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. திருமண ஆலோசனைகளும் இந்த பிரச்சனைகளை சரிசெய்யவில்லை.
இதேபோல கடந்த 2014ஆம் ஆண்டும், அதே நாட்டில் கணவருடன் உறவுகொள்ள மனைவி அவரிடமிருந்து பணம் வாங்கியுள்ளார். கணவர் தன்னையும், தனது குழந்தைகளையும், கவனித்துக்கொள்ளவில்லை என அவர் அப்போது கூறினார்.
இந்த வழக்கையடுத்து, அந்த கணவர் மாதம் $600 கொடுக்க சம்மதித்தார். ஆனால் இந்த வழக்கை போல அல்லாமல், தற்போது கணவரிடமிருந்து மனைவி பணம் வாங்கி தற்போது விவாகரத்தானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.