220,000 இலவச ஆணுறைகள் வழங்கிய பிரான்ஸ்!
பிரான்ஸ் – பாரிஸில் நடைபெற்ற 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு 220,000 இலவச ஆணுறைகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதில் 200,000 ஆணுறைகளும் 20,000 பெண் கருத்தடை சாதனங்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் கிராமத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த ஆணுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை கடந்த வருடங்களில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போதும் இவ்வாறு கருத்தடை சாதனங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
வீரர்கள், வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் இவற்றை வழங்கப்படுவதாக ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.