OOSAI RADIO

Post

Share this post

நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்?

பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு என்பது வெறும் அலங்காரத்தின் சின்னம் அல்ல. இது இந்து கலாச்சாரத்தில் முக்கியமான பகுதியாகவுள்ளது.

நெற்றியில் பொட்டு வைக்காமல் பெண்ணொருவர் இருந்தால் அவரின் அலங்காரம் முழுமை அடையாது.

பொதுவாக இரண்டு புருவங்களுக்கு இடையில் தான் பொட்டு வைக்கப்படும். நெற்றியில் போட்டு வைப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் தான்.

அந்த வகையில், பெண்கள் நெற்றியில் போட்டு வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பொட்டு வைப்பதால் கிடைக்கும் பலன்கள்

  1. அக்குபஞ்சர் படி, இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைப்பதனால் தலைவலி சரியாகி விடும் எனக் கூறப்படுகின்றது. இந்த பகுதியில் தான் ஒரு குறிப்பிட்டதொரு புள்ளி உள்ளது. அந்த புள்ளியை மசாஜ் செய்யும் போது தலைவலி உடனே குணமாகும். இதனால் பெண்கள் தினமும் போட்டு வைப்பது நல்லது.
  2. நெற்றியில் பொட்டு வைக்கும் பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்காது. ஏனெனின் இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைக்கும் போது மனம் அமைதியாகும். அத்துடன் கழுத்து, முகம், மற்றும் முழு உடலும், தசைகளும் தளரும். இதுவே இரவு வேளையில் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
  3. நெற்றியில் பொட்டு வைக்கும் நாசிப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் தூண்டப்படும். இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சைனஸ் பிரச்சனை குணமாகும் மற்றும் முகப்பில் வீக்கம் குறையும்.
  4. பொட்டு வைக்கும் இடத்தை தினமும் மசாஜ் செய்து வந்தால் நரம்புகள் தளர்த்தப்படும். அத்துடன் உடல் மற்றும் மனம் அமைதி அடையும். எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது மெதுவாக நெற்றியை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் மன அழுத்தம் நீங்கும்.
  5. நெற்றியில் பொட்டு வைக்கும் பெண்கள் இயற்கையாகவே அழகாக இருப்பார்கள். அத்துடன் இவர்களின் இளமை அவர்களின் முக அழகில் தெரியும். முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்தில் உள்ள சுருக்கங்கள் தானாக குறையும். எப்போதும் முகம் பார்க்க பொலிவாக இருக்கும்.

Leave a comment

Type and hit enter