OOSAI RADIO

Post

Share this post

அரச சேவையின் எதிர்கால நிலை!

நாட்டில் எதிர்காலத்தில் அரச சேவையில் சுனாமி தாக்கம் ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தூரநோக்கற்ற அரசியலை அகற்றுவதற்கு தேவையான அரசியல் சுனாமியை மக்கள் தேர்தலில் வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையில் நிலவி வரும் குறைபாடுகளை களைவதற்கு அரச சேவையிலும் இவ்வாறான ஓர் சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரச பணியாளர்கள் தங்களது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அரச சேவையை மாற்றியமைப்பதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter