பாடசாலை மாணவர்களை குறிவைக்கும் மசாஜ் நிலையங்கள்!
அநுராதபுரம் நகரில் சில மாதங்களில் SPA என்ற பெயரில் இயங்கும் மசாஜ் மையங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மையங்களின் உரிமையாளர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதோடு முறையான ஒழுங்குமுறை இல்லாததால், கிராமங்களுக்கு செல்லும் பக்கவாட்டு சாலைகளிலும் இந்த மையங்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான சட்டம் அமுல்படுத்தப்படும் வரை இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்த பிரதேசவாசிகள் , இத்8உ தொடர்பில் அதிகாரிகள் நாவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.