இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கொவிட் தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாட்டின் சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் இது குறித்து முறையான ஆய்வு நடத்தி, இணையத்திற்கு அடிமையாகும் குழந்தைகளை காப்பாற்ற பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக கூறியுள்ளனர்.
இருப்பினும், இலங்கை இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.