இந்த குழந்தை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத்தின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகின்றது.
3 படத்தில் கொலவெறி பாடல் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் தான் நடிகர் அனிரூத். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது இந்த பாடல் மட்டுமே.
பின்பு பல முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்த அனிரூத், கடந்த ஆண்டு பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தற்போதும் அஜித், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி பிரபலங்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஆண்ட்ரியாவுடன் காதல், சிம்பு உடன் பீப் சாங் என பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆண்ட்ரியாவை காதலித்து வந்த அனிரூத் பின்பு அவரை பிரிந்தார்.
அனிரூத்தை விட ஆண்ட்ரியா 5 வயது மூத்தவர் என்பதால் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக அனிரூத் கூறியிருந்தார்.
பின்பு நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் அனிருத் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், பின்பு இருவரும் நண்பர்கள் என்று விளக்கம் அளித்தனர்.
இவ்வாறு பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அனிரூத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் அனிரூத் குழந்தையாக இருக்கின்றார். ரஜினிகாந்த், அனிரூத் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.