OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதிய முயற்சி

கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன.

மூன்று ஆண் கழுதைகள், மூன்று பெண் கழுதைகள் மற்றும் ஒரு கழுதைக்குட்டி மன்னாரில் இருந்து பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், கழுதைப்பாலின் ஊட்டச்சத்து தாய்ப்பாலுக்கு நிகரானது என்றும் அதனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டிக்கு உலகில் அதிக தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளியோபாட்ரா போன்ற அழகிகள் தங்கள் அழகை மேம்படுத்த கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த பாலை அடிப்படையாகக் கொண்டு வாதநோய்களை தடுக்கும் தைலங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவ பீடத்தை தொடர்பு கொண்டு ஆராய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காணப்படும் இந்த விலங்கினம் தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக்களால் கழுதைகள் இறக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன.

கழுதைப்பாலை அடிப்படையாக கொண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்த தொன்மையான கழுதைகளை பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் தேவை என விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

Leave a comment

Type and hit enter