OOSAI RADIO

Post

Share this post

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் 01 லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 150 ரூபாவை அரசாங்கம் அறவிடுகின்றது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்கும் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளேன்.

இந்நிலையில் நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்த் தேவை 25,868 மெற்றிக் டொன் எனவும், தற்போது நாட்டில் 51,457 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய் இருப்பதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில் 160 இளைஞர் விவசாயத் தொழில்முனைவோர் கிராமங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter