A/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கால அவகாசம் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், இறுதித் திகதி நேற்று வரை (12) நீடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இணையத்தினூடாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்த ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.