OOSAI RADIO

Post

Share this post

அம்பானிக்கு ஏற்பட்ட சோகம் – மகனின் திருமணத்திற்கு பின் 9,200 கோடி இழப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் டாப் 10 லிஸ்டில் தவறாமல் இடம்பெறும் இவர், அண்மையில் தனது மகனின் திருமணத்தை சர்வதேச அளவில் கவனிக்கும் ஈர்க்கும் படி நடத்தி முடித்தார். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஒரே நாளில் ரூ.9,200 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு உலகமே வியக்கும்படி கடந்த வாரம் 12 ஆம் திகதி தடபுடலாக திருமணத்தை நடத்தி முடித்தார். கடந்த சில மாதங்களாகவே பேசு பொருளாக இருந்த இத்திருமணத்தில் தமிழ்நாட்டை சார்ந்த சூப்பர் ஸ்டார் துவங்கி உலக அளவில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். இதனால் சர்வதேச அளவில் அம்பானி இல்லத்திருமண பேசு பொருள் ஆனது.

இத்திருமணத்திற்காக ரூ. 4,000 முதல் 5 ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5% என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை பட்ஜெட் அறிவிப்பு அன்று, ஒரே நாளில் அம்பானியின் நிறுவனம் ரூ.9,200 கோடி நஷடத்தை சந்தித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடப்பு ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அப்போது பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது. இதனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அம்பானி நிறுவனத்தின் நிகர மதிப்பு 1.10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.9,200 கோடி குறைந்துள்ளது.

ஃபோர்ப்ஸின் தகவலின்படி, ஜுலை 22 நிலவரப்படி ரூ.97,6320 கோடி சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை தக்க வைத்தார் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வரும் இவர், எண்ணெய், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் ஒரே நாளில் அம்பானியின் நிறுவனம் ரூ.9,200 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

இதனிடையில் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு அதானி குழுமம் லாபத்தை சந்தித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானியின் நிகர மதிப்பு ஒரே நாளில் 724 மில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.6,060 கோடி அதிகரித்துள்ளது. இதனால் அவரின் சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter