இயக்குநரின் மனைவியிடம் பொலிஸ் விசாரணை!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் நெல்சன், கோலமாவு கோகிலா, டான், டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில், தமிழ் நாட்டில் சமீபகாலமாக மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரின் கொலை சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் தலைமறைவாகிய ரவு சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை போலிசார் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரவு டிசம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாகவும், வெளிநாடு தப்பி செல்வதற்கு முன் மோனிஷா தொடர்ந்து அவரிடம் போனில் பேசியதாகவும் என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறதாம். பல கேள்விகளுக்கு பதில் அளித்த மோனிஷா, வழக்கு தொடர்பாக தான் அவரிடம் பேசியதாக தெரிவித்துள்ளாராம்.
மேலும் அடுத்தக்கட்டமாக இயக்குநர் நெல்சனிடமும் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக காவத்துறையினர் தெரித்துள்ளார்கள். இந்த சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.