OOSAI RADIO

Post

Share this post

காங்கிரசில் இணைந்த பிரபலங்கள்!

இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் நடந்த மல்யுத்த போட்டி இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால், அவர் 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருக்கிறார் என்று கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், மனமுடைந்த விரக்தியில் மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்தார்.

இதையடுத்து அவருக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்தது. பின்னர் அவர் டெல்லி வந்ததும் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் அவரை அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என்று தகவல்கள் வந்தன.

அந்தவகையில், இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுலவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

முன்னதாக அவர் இந்திய ரயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார். அப்போது அவர், தான் வடக்கு ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என்றும் கூறினார்.

Leave a comment

Type and hit enter