BiggBoss இல் வெடித்த சண்டை!
அருண்- மஞ்சரி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தீபக்கிற்கு தரமான சம்பவம் ஒன்று செய்துள்ளார்கள்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர்.
இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
தலைமைத்துவம் பறிக்கப்படுமா?
இந்த நிலையில், இந்த வாரம் தீபக் கேப்டனாக இருந்து வருகிறார். அவரின் கேப்டன் பதவிற்கு ஆப்பு வைப்பது போன்று ஒரு டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
அதாவது, தீபக்கின் தலைமைத்துவம் பிடிக்காதவர்கள் பூச்செண்டியிலிருக்கும் ஒவ்வொரு பூக்களாக கட் செய்யலாம் என ஒரு நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அந்த செண்டியிலிருந்து ஒரு பூ வெட்டப்பட்டுள்ளது இன்றைய தினம் அருண்- மஞ்சரி ஆகியோருக்குள் நடந்த சண்டையில் சமாதானம் செய்ய சென்ற தீபக் பக்கம் மஞ்சரி திரும்பியுள்ளார். இதனால் தீபக் – மஞ்சரி வாதம் பெரிதாக சென்றது.
இதற்கிடையில் கடும் கோபமான மஞ்சரி பூச்செண்டியிலிருந்து மற்றுமொரு பூவையும் கட் செய்துள்ளார். தற்போது மொத்தமாக மூன்று பூக்கள் உள்ளன.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.