OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் இரவு நேர பணி குறித்து அரசின் புதிய தீர்மானம்!

பெண்களின் இரவு நேர பணி குறித்து அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பத்து மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு திருத்தப்பட்ட வரைவு மசோதாவின்படி, பெண்களின் நலன், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, ஓய்வு வசதி உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர்கள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதை எட்டிய பெண்களை மட்டுமே இவ்வாறு பணியில் அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சட்டத்திருத்தம் தொடர்பான மசோதா தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter