OOSAI RADIO

Post

Share this post

வாக்குவாதத்தில் கணவரை கொன்ற மனைவி!

கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்று கத்திக்குத்தில் முடிந்து, கணவன் கொல்லப்பட்டுள்ளார். Guyancourt (Yvelines) நகரில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடொன்றில் இருந்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு 36 வயதுடைய ஆண் ஒருவர் கழுத்துப்பகுதியில் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இத்தாக்குதலை மேற்கொண்டது 34 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டார். தம்பதிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து, கணவர் தாக்க வந்ததாகவும், தற்பாதுகாப்புக்கான தான் அவரை திருப்பி தாக்கியதாகவும் கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. தம்பதிகளின் பிள்ளைகள் இருவர் மீட்கப்பட்டு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a comment

Type and hit enter