OOSAI RADIO

Post

Share this post

உலகின் NO 1 ஓட்ட வீரர் வீதி விபத்தில் மரணம்!

உலகின் NO 1 மாரத்தான் வீரரான கெல்வின் கிப்டம், கென்யாவில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

உலக மாரத்தான் சாதனையாளரான கெல்வின் கிப்டம் தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானா உடன், நேற்றைய சாலை விபத்தில் பலியானார். இது குறித்து கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ உறுதி செய்த பிறகே வெளியுலகுக்கு இந்த பரிதாப செய்தி தெரிய வந்தது. கென்யாவின் எல்டோரெட் – கப்டகாட் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் இருவரும் பலியானார்கள்.

24 வயதான கிப்டம் சிகாகோ மாரத்தான் போட்டியில் இரண்டு மணி நேரம் 35 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். மேலும் லண்டன் மாரத்தானை 2 மணி நேரம் ஒரு நிமிடம் 25 வினாடிகளில் கடந்து, முன்னதாக உலக சாதனை புரிந்தார். 2022 வாலென்சியா மராத்தானில், கிப்டம் 2 மணிநேரம் ஒரு நிமிடம் 53 வினாடிகளில் கடந்து, வரலாற்றில் மிக வேகமான அறிமுக மராத்தான் சாதனை என்பதை படைத்தார்.

இவற்றில் சிகாகோ சாதனை, மாரத்தான் ஓட்டங்களில் இதுவரையிலான உலக சாதனையாக உள்ளது. இந்த வகையில் உலகின் நெ.1 மாரத்தான் சாதனையாளராக கிப்டம் அங்கீகரிக்கப்பட்டார். அடுத்த நிகழ்வாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் ரோட்டர்டாம் மாரத்தானில் அவர் பங்கேற்கவிருந்தார், இது உலக சாதனை படைத்த பிறகு அவரது முதல் நிகழ்வாக காத்திருந்ததில், விளையாட்டு உலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்பை உருவாக்கி இருந்தது.

இதனிடையே கிப்டமின் அகால மரண சேதி சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உலுக்கி உள்ளது. இது தொடர்பாக உலக தடகளத் தலைவர் செப் கோ கூறுகையில், “கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானாவின் இழப்பை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். சிகாகோவில் கெல்வின் தனது அசாதாரண மாரத்தான் உலக சாதனையை படைத்தபோது, அவருடைய வரலாற்று சாதனையை நான்தான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தேன். நம்பமுடியாத சாதனைக்கு சொந்தக்காரரான இளம் தடகள வீரர் நம்மை விட்டுச் செல்வதை பெரும் இழப்பாக கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter