என்கிட்ட அப்படி நடந்தார் – வடிவேலு ரொம்ப மோசமானவர்!

நடிகர் வடிவேலு, சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளை கண்டவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கொண்டவராக இருக்கிறார். சமீபகாலமாக அவருடன் சேர்ந்து நடித்த சக நடிகர் நடிகைகள் அவர் மீது குற்றச்சாட்டு முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகை ஆர்த்தி வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில்,” நான் வடிவேலுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது என்னை கூப்பிட்டு, நீ நல்ல நடிக்கிற மா.. நல்ல பண்ற என்று சொன்னார். ஆனால் இயக்குனரிடம், அந்த பொண்ணு என்னவிட நல்ல பண்ற இந்த படத்துக்கு அந்த பொண்ணு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதனால் அந்த பட வாய்ப்பு எனக்கு இல்லாமல் போய்விட்டது”.
“தன்னை விட யாராவது நன்றாக நடித்துவிட்டால் அவர்கள் தன்னுடன் இருக்க கூடாது என்ற கொள்கையை கொண்டவர் வடிவேலு. அவர் பாம்பு மாதிரி. அவர் எண்ணத்தை மாற்ற முடியாது” என்று ஆர்த்தி கூறியுள்ளார்.