300 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அரிய யோகம்!
இந்து மதத்தில் மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்நாளானது சிவபெருமானுக்கு உரிய நாள்.
இந்நாளில் சிவனை நினைத்து விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வணங்கினால், சிவனின் பரிபூர்ண அருளைப் பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைப்பதுடன், வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.
பொதுவாக மகா சிவராத்திரி நாளானது மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்ததசி திதியில் வரும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி எதிர்வரும் (08.03.2024) ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது.
ஜோதிடத்தின் படி, இந்நாளில் மிகவும் அரிதான மற்றும் சிறப்பு வாய்ந்த யோகம் உருவாகிறது. அதுவும் இந்த யோகமானது சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சிவனின் சிறப்பான ஆசியைப் பெறவுள்ளார்கள்.
இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
300 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் உருவாகும் அரிதான யோகங்கள் இந்து நாட்காட்டியின் படி, மகா சிவராத்திரி நாளன்று அதிகாலை 4.45 மணி முதல் அந்நாள் முழுவதும் சிவ யோகம் நீடித்திருக்கும்.
அத்துடன் காலை 6.45 மணிக்கு சர்வார்த்த சித்தி யோகம் தொடங்கி, 10.41 மணி வரை தொடரும். சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு யோகங்களும் மகா சிவராத்திரி நாளில் நிகழவுள்ளது.
மேலும் இந்நாளில் கிரகங்களின் நிலைகள் என்று பார்த்தால், மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்து சந்திர மங்கள யோகம் உருவாகிறது.
மேலும் கும்ப ராசியில் சனி, சூரியன், சுக்கிரன் இணைந்து திரிகிரக யோகமும், மீன ராசியில் புதன், ராகு சேர்க்கையும் உருவாகும். இப்படியான கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
மேஷம் – மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசியைப் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தையும், பதவி உயர்வையும் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்களின் தலைமைப்பண்புகள் மேம்படும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் – மிதுன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சிறப்பு யோகத்தால் சிவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.
தொழிலைப் பொறுத்தவரை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தத்தால் எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். உறவினர்களால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். சிவனின் அருளால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும்.
சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களும் சிவபெருமானின் பரிபூர்ண ஆசியை மகா சிவராத்திரி நாளில் பெறுவார்கள். மேலும் சிவனின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடனில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். புதிய வாகனம், வீடு, சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.